உள்ளூர் செய்திகள்
கோவில்

அன்னதானத்திற்கு நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன- இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு

Published On 2022-05-25 15:23 IST   |   Update On 2022-05-25 15:23:00 IST
அன்னதானம் வழங்கும் திட்டத்திற்கு நன்கொடை அளிக்கும் உபயதாரர்களின் பெயர்கள் ஒரே நாளில் இருப்பின் அவர்கள் அனைவரின் பெயரும் காட்சிப்படுத்தப்படும்.
சென்னை:

இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கையடக்க கருவி பயன்படுத்தி கட்டணச் சீட்டுகள் அளிப்பது கோவில்களின் நிர்வாகத்தில் வரவினங்களில் வெளிப்படை தன்மையை மேம்படுத்தும் என்பதால் அன்னதானத் திட்டம் நடைபெறும் கோவில்கள் டி.சி.பி. மூலம் வருவாய் வரும் கோவில்கள் உட்பட அனைத்து கோவில்களிலும் தேவைக்கேற்ப கையடக்க கருவிகளை பெற்றுக்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

அன்னதானத் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள கோவில்கள் அனைத்திலும், அன்னதானத்திற்கு நன்கொடை அளிக்க விரும்பும் பக்தர்களை ஊக்குவிக்கும் வகையில் அன்னதானக் கூடத்தில் ஒரு கையடக்க கருவி இருக்க வேண்டும்.

இதனை பக்தர்கள் அறியும் வண்ணம் விளம்பரப்படுத்தப்பட வேண்டும். பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் உபயதாரர்கள் தங்கள் இல்லங்களில் நடக்கும் சுபநிகழ்ச்சிகளான திருமண நாள், பிறந்தநாள், நட்சத்திர நாள் அன்று கோவில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க நன்கொடை அளிக்கலாம். அன்னதானம் வழங்கும் திட்டத்திற்கு நன்கொடை அளிக்கும் உபயதாரர்களின் பெயர்கள் ஒரே நாளில் இருப்பின் அவர்கள் அனைவரின் பெயரும் காட்சிப்படுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News