உள்ளூர் செய்திகள்
அறுபடை பசுமை சிறகுகளின் அமைப்பு தலைவர் ராஜசரவணன் சிட்டுக்குருவி கூண்டை இலவசமாக வழங்கினார்.

சிட்டுக்குருவியை காக்க பொதுமக்களுக்கு இலவசமாக கூண்டு வழங்கல்

Published On 2022-05-25 09:36 GMT   |   Update On 2022-05-25 09:36 GMT
திருத்துறைப்பூண்டி பகுதிகளில் சிட்டுக்குருவியை காக்க பொதுமக்களுக்கு இலவசமாக கூண்டு வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம்:

நாகை மற்றும் திருத்துறைப்பூண்டி பகுதிகளில் சிட்டு குருவிகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் அதன் இனப்பெருக்கத்திற்காக 1000 கூடுகளைஅமைக்கும் பணியை நாகை ஸ்ரீஅறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளை ஸ்ரீஅறுபடை பசுமை சிறகுகள் அமைப்பின் மூலம் தொடங்கி உள்ளது. இதில் ஏராளமான இயற்கை ஆர்வலர்கள் பங்கெடுத்து வருகின்றனர்.

இந்த கூடுகளை அமைக்க விரும்பும், ஆர்வலர்கள் இல்லங்களில் ஸ்ரீ அறுபடை அறக்கட்டளையின் உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், கூடுகளையும் சரியான இடத்தில் பொருத்தி வருகின்றனர். கூடுகள் தேவைப்படுவோர் 8344448944 என்கிற எண்ணில் அழைக்கலாம்.

மாணவர்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்கின்ற நோக்கில் நாகூர் மார்டன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சிட்டுக்குருவிக்கு கூண்டினை ஏன் அமைக்க வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வு பிரசாரம் ஸ்ரீ அறுபடை பசுமை சிறகுகள் நிறுவனர் ராஜசரவணன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் பசுமைப்படை மாவட்ட தலைவர் முத்தமிழ்ஆனந்தன், ஸ்ரீ அறுபடை பசுமை சிறகுகள் அமைப்பின் நிர்வாகிகள் கார்த்திக், ஜெகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News