உள்ளூர் செய்திகள்
தீ

அசோக்நகரில் மோட்டார்சைக்கிள் விற்பனை மையத்தில் தீ விபத்து- 11 வாகனங்கள் எரிந்து நாசம்

Published On 2022-05-25 14:30 IST   |   Update On 2022-05-25 14:30:00 IST
தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அசோக் நகர் மற்றும் தியாகராய நகர் பகுதிகளில் இருந்து 2 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 2மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
போரூர்:

சென்னை அசோக் நகர், ஜவஹர்லால் நேரு சாலையில் உள்ள காசி தியேட்டர் அருகே பிரபல நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள் விற்பனை மையம் செயல்பட்டு வருகிறது. இன்று காலை 7மணி அளவில் வழக்கம் போல ஊழியர்கள் வந்தபோது அங்குள்ள அறை முழுவதும் புகைமூட்டமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சிறிது நேரத்தில் விற்பனைக்கு இருந்த மோட்டார்சைக்கிள்கள் தீப்பற்றி எரிந்தன. உடனே ஊழியர்கள் அங்கிருந்து அலறி அடித்து வெளியே ஓட்டம் பிடித்தனர்.

தகவல் அறிந்ததும் அசோக் நகர் மற்றும் தியாகராய நகர் பகுதிகளில் இருந்து 2 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 2மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் அங்கிருந்த 11 புதிய மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பொருட்கள் தீயில் கருகி நாசமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News