உள்ளூர் செய்திகள்
முதியோர் உதவித்தொகை கேட்ட மூதாட்டிக்கு விழா மேடையிேலயே அதற்கான ஆைணயை அமைச்சர் இ.பெரியசாமி வழங்கினார்.

விழாவில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியசாமி வழங்கினார்

Published On 2022-05-24 10:02 GMT   |   Update On 2022-05-24 10:02 GMT
திண்டுக்கல் அருகே வேளாண் வளர்ச்சி விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
செம்பட்டி:

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே ஆதிலெட்சுமிபுரத்தில் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித்திட்ட தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார்.

ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி முருகேசன், துணைத்தலைவர் ஹேமலதா மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் அமைச்சர் இ.பெரியசாமி பேசிய–தாவது,

தமிழகத்தில் விவசாயிகள் நலனில் அக்கறை கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றியவர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி. அவரது வழியில் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியில் எண்ணற்ற நலத்திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வருகிறார்.  

தற்போது அறிமுகப்படுத்தி உள்ள வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் விவசாயி–களுக்கு மட்டுமின்றி, அந்த கிராமத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் பயன்பெறும் வகையில் வேளாண்துறை, மின்சார–த்துறை, வருவாய்த்துறை, வேளாண் விற்பனைத்துறை, மீன்வளத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சமூக நலத்துறை உட்பட 13 துறைகளை ஒன்றிணைத்து செயல்படுத்தப்படும். இதன்மூலம் 4 ஆண்டுகளில் தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் வேளாண்மை வளர்ச்சி பெறும் என்றார். அதனைதொடர்ந்து விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாஸ்கரன், ஆத்தூர் திமுக ஒன்றிய செயலாளர்கள் (மேற்கு) ராமன், (கிழக்கு) முருகேசன், திண்டுக்கல் (கிழக்கு) மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் தண்டபாணி, பொதுக்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், ஆத்தூர் (மேற்கு) ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மணி–கண்டன், ஆத்தூர் ஒன்றிய குழு முன்னாள் தலைவர் மலர்கண்ணன், ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தட்சிணாமூர்த்தி, ஏழுமலை–யான் மற்றும் வேளாண் அதிகாரிகள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கல்நாட்டான்பட்டியைச் சேர்ந்த பஞ்சவர்ணம் என்ற வயதான முதியவருக்கு நிவாரண உதவித்தொகை நிறுத்தப்பட்டவுடன் மிகவும் சிரமப்பட்டார். நிகழ்ச்சியில், கலந்து கொண்ட அமைச்சர் இ.பெரியசாமியிடம் தனக்கு முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும் என மனு கொடுத்தார். மனு கொடுத்த 20 நிமிடத்திலேயே விழா மேடையில் அவருக்கு முதியோர் நிவாரண உதவித்தொகை பெறுவத–ற்கான ஆணையை அமைச்சர் வழங்கினார்.

Tags:    

Similar News