உள்ளூர் செய்திகள்
ஆதி திராவிடர் விடுதியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்து மாணவர்களுக்கு பொருட்களை வழங்கிய போது எடுத்த படம்

சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் ஆதிதிராவிடர் தங்கும் விடுதியை கலெக்டர் ஆய்வு

Published On 2022-05-18 15:22 IST   |   Update On 2022-05-18 15:22:00 IST
சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் ஆதிதிராவிடர் தங்கும் விடுதியை கலெக்டர் ஆய்வு செய்தார்.
சோளிங்கர்:

ராணிபேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கொண்டபாளையம் ஸ்ரீராம் நகரில் உள்ள அரசினர் ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில்   கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார். 

மாணவர் விடுதியில் தங்கி படித்து வரும் மாணவர்களுக்கு தேவையான பொருட்களான மின்விசிறிகள், எல்இடி விளக்குகள், பாய் மற்றும் தலையணை, தண்ணீர் சூடு செய்யும் கருவி, உணவருந்தும் தட்டுகள் உள்ளிட்ட அடிப்படை பொருட்களை வழங்கினார். தற்போது மாணவர்கள் எவ்வாறு படிக்கின்றார்கள் என கேட்டறிந்தார் இம்மையத்தில் 49 மாணவர்கள் தங்கி படிக்கின்றனர்.

தற்போது விடுமுறை என்பதால் மாணவர்கள் வீடுகளுக்குச் சென்று உள்ளனர். 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர்.

என விடுதி காப்பாளர் கலெக்டரிடம் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து விடுதியின் பக்கத்திலுள்ள மைதானத்தின் எதிரில் குடியிருப்புகளில் இருந்து குப்பைகள் பிளாஸ்டிக் பொருட்கள் மதுபான பாட்டில்கள் தூக்கி எறியப்பட்டு இருந்ததை பார்த்து வீட்டின் உரிமையாளர்களுக்கு கலெக்டர் எச்சரித்தார். 

வீட்டு உரிமையாளர்கள் இனி குப்பைகளை தூய்மை பணியாளரிடம் கொடுப்பதாக தெரிவித்தனர். தொடர்ந்து நகராட்சி தூய்மை பணியாளர்கள் மைதானத்தில் கொட்ட ப்ப ட்டு இருந்த குப்பைகளை அகற்றி தூய்மை செய்தனர். 

மேலும் மைதானத்தில் உள்ள முட் செடிகளை அகற்றி மாணவர்கள் பயன்படும் வகையில் சீரமைத்து தர உத்தரவிட்டார். மைதானத்தில் சுற்றி மரக்கன்றுகளை நடவு செய்ய அறிவுறுத்தினார். 

அப்போது மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் இளவரசி சோளிங்கர் தாசில்தார் வெற்றி குமார் விடுதி காப்பாளர் ராஜேஷ் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் நகராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.

Similar News