உள்ளூர் செய்திகள்
சுகாதாரத்துறையினர் ஆய்வு

தடப் பெரும்பாக்கத்தில் பரவி வரும் டெங்கு- சுகாதாரத்துறையினர் ஆய்வு

Update: 2022-04-23 12:55 GMT
மீஞ்சூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஷ் தலைமையில் மூன்று சுகாதார ஆய்வாளர்கள் 10 கொசு ஒழிப்பு பணியாளர்கள் டெங்கு பாதித்த தெருக்களில் வீடுகளில் ஆய்வு செய்தனர்.
பொன்னேரி:

மிஞ்சூர் ஒன்றியம் தடபெரும்பாக்கம் ஊராட்சியில் கடந்த சில நாட்களாக சிலருக்கு காய்ச்சல் பரவி வந்த நிலையில் பரிசோதனை செய்ததில் கடந்த  இரண்டு வாரத்தில் குழந்தை உட்பட 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதனால் பாதிக்கப்பட்ட சாஸ்திரி தெரு, தடபெரும்பக்கம் காலனி, தெருக்களில் ஊராட்சி தலைவர் பாபு தலைமையில் தெருக்களில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்தல் கொசு மருந்து அடித்தல், பிளீச்சிங் பவுடர் தெளித்தல் உள்ளிட்ட பணியில் ஊராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் மீஞ்சூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஷ் தலைமையில் மூன்று சுகாதார ஆய்வாளர்கள் 10 கொசு ஒழிப்பு பணியாளர்கள் டெங்கு பாதித்த தெருக்களில் வீடுகளில் சோதனை செய்து கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு கொசு மருந்து அடித்தல் தேங்கியுள்ள தண்ணீரில் லார்வாக்களை அளித்தல் தண்ணீர் தேங்கியுள்ள டயர் பிளாஸ்டிக் பொருட்கள் சிரட்டை பாட்டில் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வீடு வீடாக சென்று காய்ச்சல் அறிகுறி  உள்ளதா என கேட்டறிந்தனர் மேலும் டெங்கு பாதித்த வீட்டில் தண்ணீர் தொட்டியில் உள்ள டெங்கு கொசு லார்வாக்களை பரிசோதனைக்காக  சேகரித்து  சென்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது  தடபெரும்பக்கம் ஊராட்சியில் மேலும் பரவாமல் இருக்க  அனைத்து தெருக்களிலும் சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தனர்.
Tags:    

Similar News