உள்ளூர் செய்திகள்
கைதான சல்மான்கான்

வியாபாரியை கத்தியால் குத்திய வாலிபர் கைது

Published On 2022-04-23 16:16 IST   |   Update On 2022-04-23 16:16:00 IST
மதுரை அருகே வியாபாரியை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மதுரை

மதுரை கீழபனங்காடி சாஸ்தாநகரை சேர்ந்தவர் சாகுல்ஹமீது (வயது 27). இவர் அந்தபகுதியில் மரக்கறி கடை வைத்துள்ளார்.  

நேற்றுமாலை  இவர் பீ.பி.குளத்துக்கு சென்றார். அப்போது பள்ளிக்கூட மாணவி ஒருவரை 3 பேர்கொண்ட கும்பல் புதருக்குள் அழைத்துச்செல்வது தெரியவந்தது. 

சாகுல்ஹமீது அங்கு சென்று “ஏன் இப்படி செய்கிறீர்கள்? அந்த மாணவியை விடுங்கள்” என்று தட்டிக்கேட்டார். ஆத்திரம் அடைந்த கும்பல் தகராறில் ஈடுபட்டது. இருதரப்புக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கும்பல் சாகுல்ஹமீதை கத்தியால் குத்திவிட்டு தப்பியது. 

இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யவேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தர விட்டார்.  மதுரை வடக்கு துணை கமிஷனர் ராஜசேகர், உதவி கமிஷனர் சுரேஷ் குமார் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள  கண்காணிப்பு காமிரா பதிவுகளை  கைப்பற்றி ஆய்வு செய்தார்.  அப்போது சாகுல்ஹமீதை கத்தியால் குத்தியது பழையகுற்றவாளி என்பது தெரியவந்தது.

இதையடுத்து தல்லாகுளம் போலீசார் நேற்றுஇரவு ஜெய்ஹிந்த்புரம் ஜீவாநகருக்கு சென்றனர். அங்கு வீட்டுக்குள் பதுங்கியிருந்த சாகுல்ஹமீது மகன் சல்மான்கான் (19) என்பவரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். 

அவர் செய்ததவறை ஒப்புக்கொண்டார். இதனைதொடர்ந்து வியாபாரி சாகுல்ஹமீதுவை கத்தியால் குத்திய சல்மான்கானை தல்லாகுளம் போலீசார் கைதுசெய்தனர். தப்பிஓடிய பெரியசாமி, பாலா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News