உள்ளூர் செய்திகள்
மதுரை திடீர்நகர் சப்-இன்ஸ்பெக்டர் மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை
மதுரை விஸ்வநாதபுரம் போலீஸ் குடியிருப்பை சேர்ந்தவர் தேவராஜன். இவர் திடீர்நகர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார். இவரது மகன் சூரியபாரதி (வயது22), என்ஜினீயரிங் பட்டதாரி.
சூரியபாரதி தந்தையிடம் டிராவல்ஸ் நிறுவனம் அமைத்து கொடுக்குமாறு வலியுறுத்தி வந்துள்ளார். அதற்கு தேவராஜன் ‘கொஞ்சம் பொறுமையாக இரு, நிச்சயமாக டிராவல்ஸ் நிறுவனம் வைத்து தர ஏற்பாடு செய்கிறேன் என்று சமாதானப்படுத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் சூரியபாரதி வாழ்க்கையில் விரக்தியடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.