உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

லால்குடியில் 1000 ஹெக்டேரை தாண்டிய இஞ்சி சாகுபடி

Published On 2022-04-23 16:00 IST   |   Update On 2022-04-23 16:00:00 IST
லால்குடி வட்டாரத்தில் இஞ்சி சாகுபடி 1000 ஹெக்டேரை தாண்யுள்ளது.
திருச்சி:

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டாரத்திற்கு உட்பட்ட கீழ பெருங்காவூர், திருமங்கலம், பூவாலூர் உள்ளிட்ட பகுதிகளில் இஞ்சி சாகுபடி தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த ஆண்டு 1,332 ஹெக்டேர் பரப்பளவில் விவசாயிகள் இஞ்சி பயிரிட்டனர்.

நடப்பு ஆண்டில் 1000 ஹெக்டேரை தாண்டியுள்ளனர். வரும் நாட்களில் மேலும் 300 ஹெக்டேர் பரப்பளவை தாண்டி விடுவார்கள் என வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  

வழக்கமாக மாசிபட்டம் என சொல்லக்கூடிய பிப்ரவரி மாதத்தின் நடுவில் இஞ்சி பயிரிடுவார்கள். ஆனால் இந்த ஆண்டில் சம்பா அறுவடை தள்ளிப்போனதால் இஞ்சி சாகுபடி இந்த மாதத்தில் தொடங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.  

கடந்த ஆண்டு இஞ்சி பயிரிட்ட விவசாயிகள் நல்ல லாபத்தை அடைந்தனர். லால்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் இஞ்சியை விற்பனை செய்தனர்.

தனியார் எண்ணை நிறுவன  ஏஜென்சிகள் அதிகம் கொள்முதல் செய்தனர். அதேபோன்று நடப்பு ஆண்டிலும் நல்ல வருவாய் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் அதிகம் சாகுபடி செய்து வருகின்றனர்.

Similar News