உள்ளூர் செய்திகள்
பேரையூர் அருகே இளம்பெண்ணை பலாத்காரம் செய்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் பேரை யூர் அருகே உள்ள சின்ன சிட்டுலொட்டி கிராமத்தை சேர்ந்தவர் சமுத்திரம். இவரது மகள் காளீஸ்வரி(வயது 25). இவர் பேரையூர் போலீசில் புகார்மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
நானும், எங்கள் ஊரை சேர்ந்த முனியாண்டி மகன் அரவிந்தன்(26) என்பவரும் கடந்த 2013ம் ஆண்டு முதல் காதலித்து வந்தோம். அவர் என்னை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை நெருங்கி பழகினார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக என்னிடம் அரவிந்தன் பேசுவதை தவிர்த்து வந்தார். இதுகுறித்து கேட்டபோது, உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என மறுத்தார். இதுகுறித்து அவர்களது குடும்பத்தினரிடம் சென்று கேட்டேன். அப்போது அவர்கள் எனக்கு கொலைமிரட்டல் விடுத்தனர்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்தபுகாரின் அடிப்படையில் அரவிந்தன், அவரது பெற்றோர் முனியாண்டி&செல்வி ஆகியோர் மீது பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.