உள்ளூர் செய்திகள்
அரசு பள்ளி உயர் தொழில்நுட்ப ஆய்வகம் மூலம் வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை சார்பில் 2021-2022-ம் கல்வியாண்டில் தேசிய திறனாய்வு தேர்வு நடைபெற்றது. இதில் அரசு பள்ளி உயர் தொழில்நுட்ப ஆய்வகம் மூலம் வினாடி-வினா போட்டி நடைபெற்றது.
நெல்லை:
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை சார்பில் 2021-2022-ம் கல்வியாண்டில் தேசிய திறனாய்வு தேர்வு நடைபெற்றது. இதில் அரசு பள்ளிகளில் உள்ள உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள் மூலம் வினாடி- வினா, அடிப்படை வினாடி- வினா, மாணவர்களை போதை பழக்கத்தில் இருந்து பாதுகாத்தல் சார்ந்த போட்டிகள் மாணவ- மாணவிகளுக்கு நடத்தப்பட்டது.
இந்த போட்டிகளில் சுமார் 205 மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர். அவர்களுக்கு சான்றிதழ், கேடயம் மற்றும் பரிசுகள் வழங்கும் விழா பாளையில் உள்ள காதுகேளாதோர் பள்ளியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட அலுவலர் சிவராஜ் முன்னுரை வழங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் வசந்தா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிடம் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தனசேகரன், கோவிந்தராஜ், விமலா, புஷ்பா பாய் மற்றும் ஆசிரியர்கள், பயிற்றுனர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.