உள்ளூர் செய்திகள்
புகைப்படக் கண்காட்சியை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கிவைப்பு.

வ.உ.சி. வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் புகைப்படக் கண்காட்சி

Published On 2022-04-23 10:21 GMT   |   Update On 2022-04-23 10:21 GMT
திருவாரூரில் வ.உ.சி. வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் புகைப்படக் கண்காட்சியை கலெக்டர் தொடங்கி வைத்தார்
திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் வேலுடையார் மேல்நிலைப் பள்ளியில செய்திமக்கள் தொடர்புதுறையின் சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய வாழ்க்கை வரலாறு குறித்து நகரும் புகைப்படக் கண்காட்சி வாகனத்தினை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சித்தலைவர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார். திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயின்றுவரும் மாணவ  மாணவிகள் கப்பலோட்டியதமிழன் வ.உ.சிதம்பரனார் வாழ்க்கையை அறிந்துகொள்ளும் வகையில் இந்தநகரும் புகைப்படக் கண்காட்சி திருவாரூர் வேலுடையார் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கப்பட்டு தொடர்ந்து திருவாரூர் கொடிக்கால்பாளையம் அரசுமேல்நிலைப்பள்ளி, திருவாரூர் ஜி.ஆர்.எம் பெண்கள் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி, வ.சோ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆர்.சி.பாத்திமா அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளி, கஸ்தூர்பாகாந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, விளமல் அரசு உயர்நிலைப்பள்ளி, மடப்புரம் நகராட்சி அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் காட்சிப்படுத்தப்பட்டது.

தொடர்ந்து இன்று மன்னார்குடியில் உள்ள பள்ளிகளில் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது இதன்மூலம் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் சுதந்திர போராட்டம் குறித்து எளியமுறையில் விளக்கப்படும். முன்னதாக கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படக் கண்காட்சி வாகனத்தில் அமைக்கப்-பட்டுள்ள அண்ணாரின் திருவுருவசிலைக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட கலெக்டர் காயத்ரி-கிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன், திருவாரூர் ஒன்றியக்குழு தலைவர் தேவா, திருவாரூர் நகரமன்ற தலைவர் எஸ்.புவனபிரியா செந்தில், மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி, மாவட்ட செய்திமக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள், மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News