உள்ளூர் செய்திகள்
ரெயில்

ரெயில் சேவை நீட்டிப்பு

Published On 2022-04-23 15:51 IST   |   Update On 2022-04-23 15:51:00 IST
மதுரை-செகந்தராபாத் ரெயில் சேவை 3 நாட்களுக்கு பிறகு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மதுரை

மதுரை-செகந்திராபாத் இடையேயான சிறப்பு ரெயில், ஏப்ரல்மாதம் மட்டும் இயக்குவதாக இருந்தது. அந்த ரெயில் சேவை தற்போது ஜூலை மாதம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. 

செகந்திராபாத்தில் இருந்து மே 2-ந்தேதி முதல் ஜூலை 25-ந்தேதி வரை திங்கட்கிழமைகளில் இரவு 9.25 மணிக்கு புறப்படும் ரெயில் அடுத்தநாள் இரவு 8.45 மணிக்கு மதுரை செல்லும். 

மறுமார்க்கத்தில் மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து மே மாதம் 4ந்தேதி முதல் ஜூலை 27-ந்தேதி வரை புதன்கிழமைகளில் அதிகாலை 5.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், அடுத்த நாள் காலை 7.25 மணிக்கு செகந்திராபாத் செல்லும். இந்த ரெயில்கள் திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், விருத்தாசலம், விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல், பாபட்லா, தெனாலி, குண்டூர், மிரியால்குடா, நலகொண்டாவில் நின்று செல்லும்.

-மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்திதொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

Similar News