உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

மாணவியை காதலித்த வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது

Published On 2022-04-23 15:51 IST   |   Update On 2022-04-23 15:51:00 IST
தஞ்சை அருகே வாலிபர் கொலை வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்:

தஞ்சை அருகே உள்ள வாளமார்கோட்டையை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 21) ஐ.டி.ஐ படித்துள்ளார். இவர் அதே கிராமத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவரை காதலித்தார். இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் ஆனந்தை கண்டித்தனர். 

மேலும் மாணவியின் அத்தை மகனான சூரக் கோட்டையை சேர்ந்த உதய குமாரும் (25) எச்சரித்தார். சம்பவத்தன்று இது தொடர்பாக  ஆனந்த்துக்கும், உதய குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி உதயகுமார் ஆத்திரம் அடை-ந்து ஆனந்தை அரிவாளால் வெட்டியும், கட்டையால் தாக்கினார். 

இதில் பலத்த காயமடைந்த ஆனந்த் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்-பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்த் இறந்தார்.

இது குறித்து ஆனந்தின் தந்தை முத்துகிருஷ்ணன் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொ) கார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்து உதயகுமார் மற்றும் மாண-வியின் தந்தை ரவி (52) ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.

Similar News