உள்ளூர் செய்திகள்
இலவச கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வம்
இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகாவில் உள்ள தனியார் பள்ளிகளில் நுழைவு வகுப்பு ஆன எல்.கே.ஜி, மற்றும் முதல் வகுப்பில் மாணவர்களை சேர்க்க, இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்களை சேர்ப்பதற்காக, தமிழக அரசு மாணவர்களின் விபரங்களை பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இதனால் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை இத்திட்டத்தின் கீழ் சேர்ப்பதற்கு பெரிதும் ஆர்வம் காட்டி வரும் நிலையில், தனியார் இணைய தளம் இயங்கும் கடைகளில் கூட்டம் அலைமோத தொடங்கியுள்ளது. இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர்கள், தங்களுடைய ஜாதி, வருமான, பிறப்புச் சான்றிதழ்கள், மாணவனின், ஆதார் எண், பெற்றோர்களின் ஆதார் எண், இருப்பிடச் சான்றிதழ் விவரங்கள் மற்றும் மாணவனின் புகைப்படங்களை, பதிவேற்றம் செய்து, உங்கள் விரும்பும் கல்வி நிறுவனங்களை குறிப்பிடப்பட வேண்டும்.
அதேபோல் நலிவடைந்த பிரிவினர் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதற்கு வருமானச் சான்று, பிள்ளைகளின் பிறப்புச் சான்று, மாணவனின் ஆதார் எண், பெற்றோர்களின் ஆதார் எண், இருப்பிடச் சான்று விவரங்களை, மாணவனின் புகைப்படத்தோடு பதிவேற்றம் செய்து, விரும்பும் பள்ளியை தேர்வு செய்து கொள்ளலாம்.
இணையதளத்தில் பதிவேற்றம் செய்த பின்பு, புகை சீட்டை நகலெடுத்து, தாங்கள் விரும்பும் பள்ளிக்கு, இப்போது நகலை நகலெடுத்து தருதல் வேண்டும். தற்போது, அறிவிப்பு வெளியான நாளில் இருந்து, நுழைவு தொகுப்பான எல்கேஜி மற்றும் முதலாம் வகுப்பில், தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க, இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, பெற்றோர்கள் தாங்கள் தேர்வு செய்த பள்ளிகளில் ஒப்புகை நகல்களை கொடுக்கும் பணியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால் தனியார் கம்ப்யூட்டர் சென்டர்களில் பெற்றோரின் கூட்டம் அலை மோதுகிறது. கொரோனா தொற்றின் காரணமாக, வீட்டில் இருக்கும் தங்கள் பிள்ளைகளை, பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டுவதை உணர முடிகிறது. இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், இளம் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.