உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

கோவையில் ஏ.டி.எம். எந்திரத்தின் திரையை உடைத்த வாலிபர்

Published On 2022-04-23 15:48 IST   |   Update On 2022-04-23 15:48:00 IST
வாலிபர் ஏ.டி.எம்.எந்திரத்தில் பொருத்தப்பட்ட திரையை உடைத்தாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை: 

கோவை 100 அடி ரோடு ஜி.பி. சிக்னலில் எஸ்.பி.ஐ. வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. 
 
சம்பவத்தன்று இரவு 10 மணியளவில் இந்த வங்கி ஏ.டி.எம். மையத்துக்கு 25 வயது மதிக்க தக்க வாலிபர் உள்ளே நுழைந்தார். அவர் ஏ.டி.எம். எந்திரத்தில் பொருத்தப்பட்டு இருந்த திரையை உடைத்து விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார். 

அதன் பின்னர் பணம் எடுக்க சென்றவர்கள் இது குறித்து வங்கி கிளை மேலாளர் மற்றும் ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

 உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப் பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த வாலிபரின் கைரேகைகளை பதிவு செய்தனர். 

இதுகுறித்து கணபதி கிளை வங்கி மேலாளர் மங்கல ராஜன் இது குறித்து ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கில் வாலிபர் ஏ.டி.எம்.எந்திரத்தில் பொருத்தப்பட்ட திரையை உடைத்தாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Similar News