உள்ளூர் செய்திகள்
பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

கோவை மருதமலை முருகன் கோவிலில் நாள் முழுவதும் பக்தர்களுக்கு இலவச பிரசாதம்

Published On 2022-04-23 15:48 IST   |   Update On 2022-04-23 15:48:00 IST
ஒவ்வொரு பூஜையின் போது ஒவ்வொரு வகையான பிரசாதம் ஒன்றன் பின் ஒன்றாக நாள் முழுவதும் வழங்கப்பட்டது.
வடவள்ளி: 

கோவை வடவள்ளி அருகே மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. 
இந்த கோவில் பக்தர்களால் 7&ம் படைவீடு என அழைக்கப்பட்டு வருகிறது. இந்த கோவிலுக்கு கோவை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் தினந்தோறும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

செவ்வாய், வெள்ளி, பங்குனி உத்திரம், தைப்பூசம் உள்ளிட்ட விஷேச நாட்களில்

இந்த கோவில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று முதல் தமிழகத்தில் 10 கோவில்களில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியை சென்னையில் அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

அதன் ஒரு பகுதியாக கோவை மருதமலை முருகன் கோவிலும் பக்தர்களுக்கு இலவச பிரசாதம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. மருதமலை முருகன் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் கோவை இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்வேலவன், துணை ஆணையர் விமலா ஆகியோர் பங்கேற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.

மருதமலை முருகன் கோவிலில் பஞ்சாமிர்தம், கற்கண்டு பொங்கல், திணை மாவு உருண்டை, புளியோதரை, சம்பா சாதம் உள்ளிட்டவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த கோவிலில் 5 கால பூஜை நடந்து வருகிறது. ஒவ்வொரு பூஜையின் போது ஒவ்வொரு வகையான பிரசாதம் ஒன்றன் பின் ஒன்றாக நாள் முழுவதும் வழங்கப்பட்டது.

Similar News