உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது

Published On 2022-04-23 15:47 IST   |   Update On 2022-04-23 15:47:00 IST
வரதராஜபுரம் பகுதியில் தண்ணீர் தொட்டி அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
கோவை: 

கோவைப்புதூரில் உள்ள கல்லூரி அருகே உள்ள காலி இடத்தில் சிலர் மாணவர்களை  குறிவைத்து கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து குனியமுத்தூர் போலீசார்  அங்கு சென்று சோதனை செய்தனர். 

அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த செல்வபுரத்தை சேர்ந்த சாதிக் (வயது43) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1, 200  கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதேபோல், சிங்காநல்லூர் போலீசார் வரதராஜபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள தண்ணீர் தொட்டி அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. 

அவரிடம் நடத்திய விசாரணையில் உப்பிலிபாளையம் வரதராஜபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த கவுதம் (26) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 600 கிராம் கஞ்சா, ரூ.4,500 பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Similar News