உள்ளூர் செய்திகள்
நெல்லை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி என்.எஸ்.எஸ் சார்பில் சிறப்பு முகாம்
நெல்லை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி என்.எஸ்.எஸ் சார்பில் சிறப்பு முகாம் ராமையன்பட்டியில் நடைபெற்றது.
நெல்லை:
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் நெல்லை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணிதிட்டம் இணைந்து நடத்திய சிறப்பு முகாம் நிலையான மேம்பாட்டில் இளைஞரின் பங்கு எனும் தலைப்பில் ராமையன்பட்டியில் நடைபெற்றது. முகாமில் ராமையன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் டேவிட் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதில்,கல்லூரி நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பாக மரக்கன்றுகள் நடுதல், நெகிழி இல்லா நெல்லையை உருவாக்கும் நோக்கத்துடன் கிராம மக்களுக்கு இலவச துணிப்பை வழங்குதல், சமுதாயக்கூடம் மற்றும் கிராம தெருக்களில் துப்புரவு பணி, மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி, இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் நீர்நிலை மேலாண்மை விழிப்புணர்வு முகாம் ஆகிய பணிகள் நடைபெற்றது.
இந்த முகாமில் 50 நாட்டு நலப்பணி திட்டத்தில் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் பலனடைந்தனர்.
முகாமில் ஸ்காட் கல்வி குழுமங்களின் நிறுவனர் எஸ்.கிளிட்டஸ் பாபு, நிர்வாக இயக்குநர் அருண்பாபு ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் வேல்முருகன், கல்லூரி வளாக மேலாளர் சகாரியா காபிரியேல் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சுமன் ஆகியோர் செய்திருந்தனர்.