உள்ளூர் செய்திகள்
வருமானவரி செலுத்துவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
நெல்லை வருமானவரித்துறை சார்பில் வருமானவரி செலுத்துவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி இன்று நடைபெற்றது.
நெல்லை:
75-ம் ஆண்டு சுதந்திரதின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய விடுதலைக்கு வித்திட்ட முன்னோர்களையும், கலாசாரத்தையும் முன்னெடுத்து செல்வதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக நெல்லை வருமானவரித்துறை சார்பில் இன்று விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது. 50-க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட பேரணியை, மாவட்ட கலெக்டர் விஷ்ணு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நெல்லை வருமான வரித்துறை அலுவலகத்தில் தொடங்கிய பேரணி பாளை பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள கட்டபொம்மன் சிலை அருகே முடிவடைந்தது.
முன்னதாக நாட்டின் வளர்ச்சிக்கு வருமான வரித்துறை மற்றும் வரிசெலுத்துவோரின் பங்களிப்பு, ஒளிவு மறைவற்ற வரிவிதிப்பு, வரி செலுத்துவோர் குறைதீர்ப்பு குறித்த விழிப்புணர்வு குறித்து வருமான வரித்துறை அலுவலர் மீனாட்சிசுந்தரம் விளக்கமளித்தார்.
வருமான வரித்துறை உதவி இயக்குனர் காசி சங்கர், உதவி ஆணையர் ரவீந்திரன் மற்றும் அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.