உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

நெல்லையில் வங்கி ஊழியர் மயங்கி விழுந்து சாவு

Published On 2022-04-23 15:31 IST   |   Update On 2022-04-23 15:31:00 IST
நெல்லையில் வங்கி ஊழியர் ஒருவர் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:

நெல்லை தச்சநல்லூர் நல்மேய்ப்பர் நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சங்கரன் (வயது 59). ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். நேற்று உடல்நிலை பாதிப்பிற்காக மாத்திரை சாப்பிட்டு உள்ளார்.  பின்னர் திடீரென மயங்கி விழுந்தார்.

அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இரவிலேயே சங்கரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News