உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

கோவையில் சொத்தை எழுதி வைக்க மறுத்த கள்ளக்காதலி மீது தாக்குதல்

Published On 2022-04-23 15:29 IST   |   Update On 2022-04-23 15:29:00 IST
டிரைவரின் மனைவி மற்றும் மகன் ஆகியோர் பெண்ணின் வீட்டிற்கு சென்று அங்கு இருந்த நாகராஜை தங்களது வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
கோவை: 

கோவை சரவணம் பட்டியை சேர்ந்த 50 வயது பெண். இவருக்கு கடந்த 20 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியில் வசித்து வந்த டிரைவர் நாகராஜ் (50) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 

இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகன் உள்ளனர். நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. கணவர் வெளியே செல்லும் நேரத்தில் பெண் தனது கள்ளக்காதலனை வீட்டிற்கு அழைத்து ஜாலியாக இருந்து வந்தார்.

2&வது அலையாக கொரோனா தொற்று பரவிய போது பெண்ணின் கணவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

கணவர் இறந்ததால் பெண் தனது கள்ளக்காதலனுடன் வசித்து வந்தார். இதனையடுத்து டிரைவரின் மனைவி மற்றும் மகன் ஆகியோர் பெண்ணின் வீட்டிற்கு சென்று அங்கு இருந்த நாகராஜை தங்களது வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
 
அதன் பின்னர் தனது கள்ளக்காதலனை தொடர்பு கொண்ட பெண் தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அழைத்தார். அங்கு சென்ற அவர் பெண்ணுடன் வசித்து வந்தார். அப்போது நாகராஜ் பெண்ணிடம் உனது பெயரில் உள்ள சொத்துக்களை தனது மகனின் பெயருக்கு எழுதி கொடுக்கும்படி கூறினார். 

அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நாகராஜ் தனது கள்ளக்காதலியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கு இருந்து சென்றார். 

இது குறித்து பெண் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் பெண் ணை தாக்கிய நாகராஜ் மீது கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News