உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

கோவை மாநகரில் இளம்பெண் உள்பட 3 பேர் தற்கொலை

Published On 2022-04-23 15:28 IST   |   Update On 2022-04-23 15:28:00 IST
இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை: 

கோவை ரத்தினபுரி அருகே உள்ள செல்லப்ப கவுண்டர் வீதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி சுகப்பிரியா (வயது 28). 

சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த இவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 

இதுகுறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குனியமுத்தூர் அருகே உள்ள சத்யா நகரை சேர்ந்தவர் மகாலிங்கம் (40). சம்பவத்தன்று இவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த மகாலிங்களம் சாணிப்பவுடரை கரைத்து குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். 

இதனை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மகாலிங்கம் பரிதாபமாக இறந்தார்.  இது குறித்து குனியமுத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சவுரிபாளையம் அருகே உள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் விக்னேஷ் (25). கட்டிட தொழிலாளி. கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இவரது முதல் மனைவி இறந்து விட்டார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரம்யா என்ற பெண்ணை 2&வதாக திருமணம் செய்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 

இதனால் ரம்யா தனது கணவரிடம் கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். இதன் காரணமாக மனவேதனை அடைந்த விக்னேஷ் வாழ்க்கையில் விரக்தி அடைந்து குடிபோதையில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Similar News