உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

கரூரில் அடுத்தடுத்த 2 கோவில்களில் கொள்ளை

Published On 2022-04-23 15:21 IST   |   Update On 2022-04-23 15:21:00 IST
கரூரில் அடுத்தடுத்த 2 கோவில்களில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது.
கரூர்:

கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றுவருகிறது. இதனை தடுக்க போலீசார் ரோந்து பணியை அதிகரித்துள்ளனர். இந்நிலையில் 2 கோவில்களில் உண்டியலை உடைத்து மர்மநபர்கள்  கொள்ளையடித்துள்ளனர்.


கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் லாலாபேட்டை அருகே பிள்ளபாளையம் ஊராட்சி வீரக்குமாரன்பட்டி கிராமத்தில் தென்னந்தோப்பில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் காலை மற்றும் மாலை நேரங்களில் பூஜைகள் நடைபெறுவதுடன்.

இப்பகுதி மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசணம் செய்வது வழக்கம். இந்நிலையில் வழக்கம் போல் தரிசணத்திற்காக வந்த பக்தர்கள், கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக கோவில் நிர்வாகத்திடம் தகவல் கொடுத்தனர்.


அவர்கள் வந்து பார்த்த போது உண்டியல் மற்றும் அம்மன் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியும் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதே போல் கருப்பத்தூர் ஊராட்சி கே.புதுப்பட்டி கிராமத்தில் தென்னந்தோப்பில் பெரியகாண்டி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சம்பவத்தன்று இரவு உண்டியலை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.


இச்சம்பவங்கள் குறித்து வந்த புகாரின் பேரில், லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். மேலும் அருகில் இருந்த சிசிடிவி பதிவுகளையும் பார்வையிட்டு, கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.

Similar News