உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

அதிக மாத்திரைகள் தின்று வாலிபர் தற்கொலை

Published On 2022-04-23 15:20 IST   |   Update On 2022-04-23 15:20:00 IST
நெல்லையை அடுத்த தேவர்குளம் அருகே உள்ள தடியபுரம் தெற்கு தெருவை சேர்ந்த வாலிபர் அதிக மாத்திரைகள் தின்று தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:

நெல்லையை அடுத்த தேவர்குளம் அருகே உள்ள தடியபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் அந்தோணி. இவரது மகன் அருண்குமார் (வயது28). இவர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிப்பு காரணமாக நெல்லையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

 சமீபத்தில் வீடு திரும்பிய அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி கிடந்தார்.

அவரை அவரது உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

Similar News