உள்ளூர் செய்திகள்
தொடரும் மின்வெட்டு.

அறிவிக்கப்படாத மின்தடை

Published On 2022-04-23 15:17 IST   |   Update On 2022-04-23 15:17:00 IST
ராமநாதபுரம் மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
ராமநாதபுரம்

கோடைவெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதிப்பட்டு வரும் வேளையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகும் நிலைக்கு  தள்ளப்பட்டு உள்ளனர். 

சிலபகுதிகளில் மின்தடை ஏற்பட்டு மீண்டும் மின்சாரம் வந்தாலும் குறைந்த மின் அழுத்தமாக உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் செய்தாலும் கண்டுகொள்வது கிடையாது.

தற்போது முஸ்லிம்கள் நோன்பு காலத்தை கடைப் பிடித்து இரவில் சிறப்பு தொழுகை நடத்தி வருகின் றனர்.  இந்தநேரத்தில் முன்அறிவிப்பும் இல்லாமல் இரவு நேத்தில் மின்தடை ஏற்படுத்திவருவது மக்களுக்கு வேதனையை அளித் துள்ளது. இதனால் தொழுகை நடத்துவதற்கும் இடையூறாக உள்ளது.

பெண்கள் தனியாக செல்லவும், அதிகாலையில் நோன்பு வைக்கவும் சிரமப் படுகின்றனர். ஆண்டு தோறும் ரம்ஜான் மாதத்தில் இதேநிலை தொடர்ந்து வருவது புதிராக உள்ளது.

இரவு நேரங்களில் ஏற்படும் தொடர் மின்தடையால் கைக்குழந்தைகள், கர்ப் பிணிகள், முதியோர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் என அனைத்து தரப்பினரும் கொசுக் கடியிலும், புழுக்கம் காரணமாகவும் தூக்கத்தை தொலைத்து அவதிப்பட்டு வருகின்றனர்.

தொடர் மின்தடை ஏற்பட காரணம் தெரியாமல் பொது மக்கள் புலம்பி தவித்து வருகின்றனர். மின் சாரம் தடைக்கு பொதுமக்களும், சமூகஆர்வலர்களும் கண்ட னங்களை தெரிவித்து வருகின்றனர். 

தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு சீரான மின்வினியோகம் செய்ய வேண்டும் என அனைத்து தரப் பினரும் கோரிக்கை விடுத்தனர்.

Similar News