உள்ளூர் செய்திகள்
அரிசி கடத்தியவர்களை படத்தில் காணலாம்.

சென்னையில் இருந்து கேரளாவிற்கு 30 டன் ரேஷன் அரிசி கடத்தல்

Published On 2022-04-23 15:14 IST   |   Update On 2022-04-23 15:14:00 IST
அதில் 50 கிலோ எடை கொண்ட 600 சாக்குமூட்டைகளில் 30 டன் எடை கொண்ட ரேசன் அரிசி இருப்பது தெரியவந்தது.
பொள்ளாச்சி: 

பொள்ளாச்சி குடிமைப்-பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறையினருக்கு கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடதப்பட உள்ளதாக ரகசிய தகவல் வந்தது. 

அதன்பேரில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்-புலனாய்வு-த்துறை ஆய்வாளர் கோபிநாத் தலைமையில் வாளையார் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.

அந்த வழியாக  வந்த டாரஸ் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அதில் 50 கிலோ எடை கொண்ட 600 சாக்குமூட்டைகளில் 30 டன்  எடை கொண்ட ரேசன் அரிசி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து லாரியில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்த டிரைவர் வினோத்(38), உதவியாளர் சதாம் உசேன்(32) என்பதும் தெரிய வந்தது.மேலும் இவர்கள், சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் இருந்து கேரள மாநிலத்தை சேர்ந்த சபர் அலி என்பவருக்கு ரேஷன் அரிசியை கடத்தி செல்வதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் லாரி மற்றும் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து ரேசன் அரிசியை கடத்திய பாலக்காட்டை சேர்ந்த சபர் அலி மற்றும் லாரி உரிமையாளர்  பாலக்காட்டை சேர்ந்த  பசீர்  ஆகியோரையும் போலீசார் தேடிவருகின்றனர்.

Similar News