உள்ளூர் செய்திகள்
வேலை வாங்கித்தருவதாக கூறி வாலிபரிடம் பணம் மோசடி செய்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ராமநாதபுரம்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் கவுதமன் (வயது29). இவரது மனைவி ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.
கவுதமன் ஜன்னல், கதவு பொருத்தும் தொழிலில் ஈடுபட்டுவந்தார். வெளிநாடு செல்ல இணையத்தில் விவரங்களை தேடியுள்ளார்.
அப்போது குவைத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை இருப்பதாக தகவல் இருந்துள்ளது. அதில் இடம் பெற்ற மொபைலுக்கு உரியவரை தொடர்பு கொண்டபோது பணம் செலுத்துமாறு கூறியுள்ள னர். அதன் அடிப்படையில் பல தவணைகளாக இணையதளம் மூலம் ரூ.71 ஆயிரத்து 500 செலுத்தியபின் வேலை கிடைக்கவில்லை.
மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த கவுதமன் இதுகுறித்து ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.