உள்ளூர் செய்திகள்
முகாமில் மருத்துவ உதவியை யூனியன் சேர்மன் பாலசிங் வழங்கிய போது எடுத்தபடம்.

வருமுன் காப்போம் திட்ட சிறப்பு முகாம்

Published On 2022-04-23 15:12 IST   |   Update On 2022-04-23 15:12:00 IST
உடன்குடி வட்டார அளவிலான வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளாளன்விளையில் நடைபெற்றது.
உடன்குடி:

தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் உடன்குடி வட்டார அளவிலான வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளாளன்விளையில் நடைபெற்றது.

யூனியன் தலைவர் பாலசிங் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். 

வட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செழியன், உடன்குடி பேரூராட்சி மன்றத் துணைத்தலைவர் மால்ராஜேஷ், ஊராட்சி மன்றத் தலைவர்கள் ராஜரத்தினம், பாலமுருகன், குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் ஜெயா துரைப்பாண்டியன், உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவி மீரா சிராஜூதீன், பேரூராட்சி நியமனக்குழு உறுப்பினர் ஜான்பாஸ்கர், யூனியன் உறுப்பினர்கள் லெபோரின், மெல்சி ஷாலினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மத்திய, மாநில அரசுகள் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து வட்டார மருத்துவ அலுவலர் அனி பிரிமின் பேசினார்.

முகாமில் மத்திய-மாநில அரசுகளின் சுகாதாரத் திட்டங்கள், பிரதமரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், சத்தான உணவுகள், குடும்ப நலம், தமிழக அரசின் மக்களைத் தேடி மருத்துவம், விபத்துக் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு திட்ட ங்கள் குறித்த செயல்விளக்கம் நடைபெற்றது. 

பள்ளித் தலைமையாசிரியர் டேவிட் வசந்தகுமார், பூச்சியியல் வல்லுநர் ஆனந்தன், தி.மு.க. மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் மகா விஷ்ணு, சிராஜூதீன், அலாவுதீன், ஷேக் முகம்மது, நகர பொருளாளர் தங்கம் உட்பட திரளான சுகாதார, அங்கன்வாடி, மருத்துவ பணி-யாளர்கள் கலந்துகொண்டனர். 

முன்னதாக வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சேதுகுற்றாலம் வரவேற்று பேசினார். முடிவில் மருத்துவமில்லா மேற்பார்வையாளர் ஜான்ராஜா நன்றி கூறினார்.

Similar News