உள்ளூர் செய்திகள்
பள்ளியில் கழிவறைக்கு தண்ணீர் எடுத்து செல்லும் மாணவிகளை படத்தில் காணலாம்.

தருமபுரி அரசு மகளிர் பள்ளியில் கழிவறையை சுத்தம் செய்ய தண்ணீர் எடுத்து சென்ற மாணவிகள்

Published On 2022-04-23 15:09 IST   |   Update On 2022-04-23 15:09:00 IST
தருமபுரி அரசு மகளிர் பள்ளியில் கழிவறையை சுத்தம் செய்ய தண்ணீர் எடுத்து சென்ற மாணவிகளால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி, 

படித்தால் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். அதனால் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை விடுமுறை கூட எடுக்க விடாமல் பள்ளிக்கு அனுப்பி வைக்கிறார்கள். அங்கு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கூட இருக்கிறார்கள். 

பள்ளி கழிவறையை வேலை ஆட்கள் வைத்து தான் சுத்தம் செய்ய வேண்டும். ஆனால் தற்போது பள்ளியில் இது போன்று மாணவ, மாணவிகளை வைத்து சுத்தம் செய்து வருகிறார்கள். இதனால்  பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசு பள்ளி கழிவறையை மாணவர்கள் சுத்தம் செய்யும் வீடியோ வைரலானது. இதனால் பள்ளி ஆசிரியரை சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளது. ஆனால் என்னதான் ஆசிரியரை சஸ்பெண்டு செய்தாலும் மாணவ, மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்யும் சம்பவம் தொடர்ந்து கொண்டு தான் வருகிறது. இதுபோன்று சம்பவம் தற்போது தருமபுரியில் மீண்டும் நடந்துள்ளது.

தருமபுரியை அடுத்துள்ள இலக்கியம்பட்டி அரசு மகளிர் பள்ளியில் சுமார் 100 க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.
இங்கு மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் என தனிதனியாக கழிவறைகள் உள்ளது. ஆனால் இந்த அரசு பள்ளியில் கழிவறையை சுத்தம் செய்வதற்கு தண்ணீரை மாணவிகள் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இதனால் மாணவிகளின் பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

Similar News