உள்ளூர் செய்திகள்
நல்லம்பள்ளி அருகே கார் மோதி வாலிபர் காயம் அடைந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், அரூர் கீழ் பாஷா பேட்டையை சேர்ந்தவர் முகமது ரபிக் (வயது37). இவர் தனது சொந்த வேலை விஷயமாக நேற்று மாலை காரில் ஓசூரில் இருந்து சேலத்திற்கு சென்றார்.
அப்போது நல்லம்பள்ளி அடுத்த சவுளூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது எதிரே ஒரு வழிப்பாதையில் நார்த்தம் பட்டியை சேர்ந்த மாரியப்பன் (25) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்டு மாரியப்பனுக்கு பலத்த படுகாயம் ஏற்பட்டது.
தொடர்ந்து சென்ற கார் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து உடனடியாக அங்கு வந்த போலீசார் படுகாயம் அடைந்த மாரியப்பனை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.