உள்ளூர் செய்திகள்
சாம்பியன் பட்டம் வென்ற தூத்துக்குடி கல்லூரி அணிக்கு பரிசு வழங்கப்பட்டது.

கல்லூரிகளுக்கு இடையேயான பல்திறன் போட்டிகள்

Published On 2022-04-23 15:07 IST   |   Update On 2022-04-23 15:07:00 IST
சாயல்குடி அருகே கல்லூரிகளுக்கு இடையேயான பல்திறன் போட்டிகள் நடந்தன.
சாயல்குடி

சாயல்குடி அருகே உள்ள கன்னிராஜபுரம் தியாகி தர்மக்கண்-அமிர்தம் கல்வியியல் கல்லூரியில் தென் மாவட்ட அளவிலான மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு இடையேயான பரதநாட்டிய போட்டிகள் நடந்தன. 

இதில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி பெற்றது. கன்னிராஜபுரம் தர்மக்கண்-அமிர்தம் கல்வியியல் கல்லூரியில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் சந்திர சேகர பாண்டியன் தலைமை வகித்தார்.  

முதல்வர் தாமோதரன் முன்னிலை வகித்தார். மாணவிகளின் பேச்சு, நடனம், நடிப்பு, பாடல் என பல்வகை திறனை வெளிப்படுத்தும் வகையில் போட்டிகள் நடந்தன. 

வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை தமிழக அரசின் கலைமாமணி விருதுபெற்ற அமலபுஷ்பம் வழங்கினார். 

ராமநாதபுரம், மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து மகளிர் கல்லூரிகள்  போட்டியில் பங்கேற்றனர். வெற்றிபெற்ற கல்லூரி மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. உதவி பேராசிரியர் குருசாமி நன்றி கூறினார்.

Similar News