உள்ளூர் செய்திகள்
சுகாதார திருவிழாவை நவாஸ்கனி எம்.பி. தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

சுகாதார திருவிழா

Published On 2022-04-23 15:01 IST   |   Update On 2022-04-23 15:01:00 IST
பரமக்குடி அருகே சுகாதார திருவிழா நடந்தது.
பரமக்குடி

பரமக்குடி வட்டார அளவிலான சுகாதார திருவிழா மற்றும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் பார்த்திபனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.

பரமக்குடி சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். நெல்மடூர் ஊராட்சி மன்றத் தலைவர் சுகன்யா சதீஷ் முன்னிலை வகித்தார். ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பொதுமக்களின் சுகாதாரம் சார்ந்த விளக்க கண்காட்சியை பார்வையிட்டார். வட்டார மருத்துவ அலுவலர், சுகந்தி போஸ் வரவேற்றார்.

தொற்றா நோய்களான நீரிளிவு, ரத்த அழுத்தம், இருதய கோளாறு உள்ள நோயாளிகளுக்கு சிறப்பு மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு ரத்த சிறுநீர் பரிசோதனை செய்து மருந்துகள் வழங்கப்பட்டன. 

கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஸ்கேன், பரிசோதனையும், மார்பக, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனையும் செய்யப் பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்றனர்.

சுகாதார திருவிழா வினையொட்டி குடும்பநலம், தொழுநோய், காசநோய், எயிட்ஸ், தடுப்பூசி, கண், டெங்கு விழிப்புணர்வு, கொரோனா தடுப்பு, உணவு கலப்படத்துறை, சத்துணவு, சித்த மருத்துவம், உள்ளிட்ட பல்வேறு சுகாதாரம் சார்ந்த சிறப்பு கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன.

இதில் மருத்துவ அலுவலர் விக்னேஷ், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜயகுமார், சித்த மருத்துவ அலுவலர் துளசி, மாவட்ட பூச்சியியல் அலுவலர் கண்ணன், துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் ரகுபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் காந்தி நன்றி கூறினார்.

Similar News