உள்ளூர் செய்திகள்
சோதனை

கோவையில் மண்டல இணை போக்குவரத்து ஆணையாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை

Published On 2022-04-23 15:01 IST   |   Update On 2022-04-23 15:01:00 IST
சனிக்கிழமை விடுமுறை நாளான இன்று கோவையில் இணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை:

கோவை பாலசுந்தரம் ரோட்டில் உள்ள மத்திய வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களை அடங்கிய மண்டல இணை போக்குவரத்து ஆணையர் அலுவலகம் உள்ளது.

இங்கு இணை போக்குவரத்து ஆணையராக உமா சக்தி என்பவர் உள்ளார். இந்த அலுவலகத்தில் லஞ்சம் வாங்கப்படுவதாக தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

இந்த புகாரின் பேரில் கோவை லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திவ்யா தலைமையில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலையில் இருந்து அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

சனிக்கிழமை விடுமுறை நாளான இன்று கோவையில் இணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று சென்னையில் உள்ள ஒரு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர் இந்த சோதனையில் அங்கு இருந்து ரூ. 34 லட்சம் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக இன்று கோவையில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Similar News