உள்ளூர் செய்திகள்
பஸ்சில் தொங்கியபடி பயணிக்கக் கூடாது: ஆசிரியர் முன்பு மரியாதை இல்லாமல் நடப்பது திமிராக பேசுவது மாணவரின் எதிர்காலத்தை பாதிக்கும் மோட்டார் வாகன ஆய்வாளர் அறிவுரை
நிகழ்ச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர் தரணிதரன் பேசிய காட்சி.
தருமபுரி, ஏப்.23-
தருமபுரி நகர போக்குவரத்து காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் அதிகமான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மணிவண்ணன் தலைமை வகித்தார். இதில் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் தரணிதரன் பேசியதாவது:&
18 வயது நிரம்பியவர்கள் தான் மோட்டார் வாகனங்களில் ஓட்ட வேண்டும் முறையாக பயிற்சி லைசன்ஸ் எடுத்த பின்பு தான் வாகனங்களை ஓட்ட வேண்டும். 18 வயதுக்கு முன்பு சிறுவர்கள் ஓட்டிச் செல்வதால் விபத்து ஏற்படுகிறது. இதனால் அவருடைய வாழ்க்கையே பாதிக்கப்படுகிறது. தருமபுரி மாவட்டத்திலிருந்து போலீஸ், ராணுவம், உள்ளிட்ட சீருடை பணிகளுக்கு அதிக இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியில் உள்ளனர். 100&க்கு 15 பேர் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர்.
படிக்கும் மாணவர்கள் அனைவரும் வேலைக்கு செல்லவேண்டும். சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும். பஸ் படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்யக்கூடாது. உங்களால் பஸ் ஓட்டுனர் நடத்துனர் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே மாணவர்கள் சாலை விதிகளை கடைபிடித்து 18 வயதுக்கு பிறகு வாகனங்கள் ஓட்ட வேண்டும். தற்போது புதிய விதிமுறைகள் வந்துள்ளது. அதன்படி ஹெல்மெட் அணியாமல் சென்று வாகனம் விபத்து ஏற்பட்டால் இன்சூரன்ஸ் நிவாரணத்தொகை கிடைக்காது. எனவே டூவீலர் ஓட்டிச் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து போக்குவரத்து போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் சரவணன் பேசுகையில் பெற்றோருக்கு அடுத்தபடியாக ஆசிரியர்தான் குரு அந்த ஆசிரியர்களின் சொல்படி மாணவர்கள் நடக்க வேண்டும். ஆசிரியர் முன்பு மரியாதை இல்லாமல் நடப்பது திமிராக பேசுவது மாணவரின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. 18 வயது நிரம்பாத நிலையில் மாணவர்களே வாகனம் ஓட்டினால் 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். வாகனம் ஓட்டும் சிறுவர்களின் பெற்றோர் மீது நடவடிக்கை பாயும். ஒரே டூ வீலரில் மூன்று பேர் பயணம் செய்யக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.