உள்ளூர் செய்திகள்
சேலம்கோவை புறவழிச்சாலை கத்தேரி பிரிவு பகுதி.

சேலம்-கோவை புறவழிச்சாலையை கடக்க முடியாமல் தவிக்கும் மாணவர்கள்

Published On 2022-04-23 14:10 IST   |   Update On 2022-04-23 14:10:00 IST
சேலம்-கோவை புறவழிச்சாலையை கடக்க முடியாமல் மாணவர்கள் தவிப்புக்கு ஆளாகி வருகிறார்கள்.
குமாரபாளையம்:

குமாரபாளையம் அருகே வேமன்காட்டுவலசு பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் தட்டான்குட்டை ஊராட்சி அலுவலகம் அருகில் தொடக்கப்பள்ளி ஆகியன செயல்பட்டு வருகிறது. 

காலை 8:30 மணி முதல் சேலம்கோவை புறவழிச்சாலையை கடந்து அதிக அளவிலான மாணவர்கள் இந்த பள்ளிகளுக்கு வருகின்றனர். ஆனால், இந்த சாலையில் வாகனங்கள் வேகமாக சென்று வருவதாலும், போக்குவரத்து போலீசார் கத்தேரி பிரிவு பகுதியில் நிற்காமலும் இருப்பதால் சாலையை கடக்க முடியாமல் தவிப்புக்கு ஆளாகி வருகிறார்கள்.

மிகவும் முக்கியமான நேரமான காலை மற்றும் மாலை பள்ளி நேரங்களில் இங்கு போக்குவரத்து போலீசார் நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News