உள்ளூர் செய்திகள்
மருத்துவ மதிப்பீட்டு விழிப்புணர்வு பயணம்

மருத்துவ மதிப்பீட்டு முகாம் விழிப்புணர்வு பயணம்

Published On 2022-04-23 13:58 IST   |   Update On 2022-04-23 13:58:00 IST
திருவாரூர் அருகே மருத்துவ மதிப்பீட்டு முகாம் விழிப்புணர்வு பயணம் நடைபெற்றது.
திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் பள்ளிக் கல்வித் துறையின் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் சார்பில் மருத்துவ மதிப்பீடு விழிப்புணர்வு பயணம் நடைபெற்றது. 

கொரடாச்சேரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இப்பேரணியை கொரடாச்சேரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் செர்பின் அருள் தொடங்கி வைத்தார். பேரணி பள்ளி வளாகத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக பேருந்து நிலையம் வரை சென்று, மீண்டும் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் முடிவடைந்தது.

இவ்விழிப்புணர்வு பேரணியில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பிருந்தாதேவி, ஒருங்கிணைப்பாளர் சரவணன், ஆசிரியர் பயிற்றுநர் ரேவதி, உடற்கல்வி ஆசிரியர் மதியழகன் மற்றும் சிறப்பாசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பேரணியில் மாணவர்கள் விழிப்புணர்வு வாசகங்களை கையில் ஏந்தி முழக்கமிட்டு சென்றனர்.

Similar News