உள்ளூர் செய்திகள்
ஏற்காட்டில் மறியலுக்கு முயன்ற சாலையோர வியாபாரிகளிடம் டி.எஸ்.பி பேச்சுவார்த்தை
ஏற்காட்டில் மறியலுக்கு முயன்ற சாலையோர வியாபாரிகளிடம் டி.எஸ்.பி பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஏற்காடு:
ஏற்காட்டு ஒண்டிகடை பகுதியில் சாலையோரம் இருந்த கடைகளை நேற்று நெடுஞ்சாலை துறையினர் அப்புறப்படுத்தினர்.
அப்போது வியாபாரிகள் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு நெடுஞ்சாலை துறையினரை கண்டித்து மாற்று இடம் தரக்கோரி சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
இதை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகளை டி.எஸ்.பி. தையல்நாயகி ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அழைத்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார்.
பின்பு அவர்களது கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்திடம் எடுத்துகூறி அவர்களது வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
அவருக்கு வியாபாரிகள் நன்றி கூறினார். டி.எஸ்.பி தையல்நாயகியின் இந்த செயலால் போராட்டம் தவிர்க்கப்பட்டது.