உள்ளூர் செய்திகள்
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
நன்னிலம் அருகே இளம்பெண் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார்.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்துள்ள மகாராஜபுரம் காந்தி தெருவை சேர்ந்த பிரபாகரனுக்கும், சிறுபுலியூர் வடக்கு தெருவை சேர்ந்த செல்வம் மகள் ஜெயமாலினிக்கும், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. பிரபாகரன் ஜெயமாலினி தம்பதிக்கு, ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 20ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நிலையில் ஜெயமாலினி தூக்கு மாட்டி இறந்தார். தகவலறிந்த ஜெயமாலினியின் சகோதரர் கேசவன் பேரளம் காவல் நிலையத்தில் தனது தங்கையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக புகார் தெரிவிக்க, புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, ஜெயமாலினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஜெயமாலினியின் மரணம் குறித்து பேரளம் ஆய்வாளர், நன்னிலம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.