உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

ஆசை வார்த்தை கூறி பெண்ணுக்கு பாலியல் தொல்லை

Published On 2022-04-23 13:49 IST   |   Update On 2022-04-23 13:49:00 IST
நன்னிலம் அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பெண்ணுக்கு பாலியல் தொல்லை புகாரின் பேரில் வாலிபருக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நன்னிலம்:

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுக்கா காட்டான் குடியிருப்பு பகுதியை சேர்ந்த விலாங்கர் என்பவருடைய மகன் சங்கர் (வயது 32). இவர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்துள்ள நெடுங்குளம் மெயின் ரோட்டை சேர்ந்த ஒரு இளம்பெண் வீட்டின் அருகே செம்மரி ஆடுகளை கடந்த சில நாட்களாக மேய்ப்பதற்காக வந்தார்.

இந்நிலையில், அந்த இளம் பெண்ணோடு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் யாருக்கும் தெரியாமல் பேசி பழகி உள்ளனர். திருமணம் செய்து கொள்வதாக கூறி ஆசை வார்த்தை பேசி அந்த பெண்ணுடன் சங்கர் நெருங்கி பழகி உள்ளார். 

இந்நிலையில், சங்கர் திடீரென காணாமல் போக இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பெண் பேரளம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் சங்கர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News