உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

அரசு அலுவலகங்களுக்கு முகக்கவசம் அணிந்து வந்த பணியாளர்கள்

Published On 2022-04-23 13:39 IST   |   Update On 2022-04-23 13:39:00 IST
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு அலுவலகங்களுக்கு முகக்கவசம் அணிந்து வந்த பணியாளர்கள் - பொதுமக்கள் அலட்சியம்
நாகர்கோவில்:

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதைய டுத்து முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட் டுள்ளது. முகக்கவசம் அணியாதவர் களுக்கு ரூ.500 அபராதம் விதிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

குமரி மாவட்டத்திலும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க சுகாதாரத்துறை அதிகாரிகளும், போலீசாரும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

முகக்கவசம் கட்டாய மாக்கப்பட்டதையடுத்து இன்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த ஊழியர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து பணிக்கு வந்தனர்.

கலெக்டர் அலுவலகம் வந்த பொதுமக்களும் முகக்கவசம் அணிந்து வருமாறு அறிவுறுத்தப்பட்டனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

மாவட்டம் முழுவதிலும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணியாளர்கள் முகக்கவசம் அணிந்து பணிக்கு வந்தனர். 

ஆனால் நாகர்கோவில் கடை வீதிகளுக்கு வந்த பொது மக்கள் பலர் முகக்கவசம் அணிவதில் அலட்சியம் காட்டினார்கள். பெரும்பாலான பொதுமக்கள் யாரும் முகக்கவசம் அணியாமல் சுற்றித்திரிந்தனர்.

நாகர்கோவில் நகர் முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் இரு சக்கர வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினர். 

மாவட்டம் முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் முகக்கவசம் அணியாத வர்களை எச்சரித்து அனுப்பினார்கள்.

சுகாதாரத்துறை அதிகாரி கூறுகையில், முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியில் போலீசாரும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் ஈடுபடுவார்கள். ஏற்கனவே முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது.

தற்போது ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும் போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.

கொரோனா பரவலில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முகக்கவசம் மிக முக்கியமானதாகும். தடுப்பூசி செலுத்தாதவர்களும் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

குமரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக தினசரி கொரோனா பாதிப்பு பூஜ்யத்தில் இருந்து வருகிறது. இதனால் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டு மூடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து கொரோனா வார்டை தயார்படுத்தும் பணி நடந்து வருகிறது. 

Similar News