உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை

Published On 2022-04-23 07:25 GMT   |   Update On 2022-04-23 07:25 GMT
நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டால், மே மாதம் 23-ந் தேதி, அந்தந்த பள்ளிகளில் குலுக்கல் முறை செயல்படுத்தப்படும்.
உடுமலை:

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் மெட்ரிக் பள்ளி கனவு நனவாக்கப்பட்டு வருகிறது.

இதன் கீழ் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை விருப்பப்படும் தனியார் பள்ளிகளில் நுழைவு வகுப்பில் இருந்து சேர்ந்து கொள்ளலாம். அதன்படி மாணவர் சேர்க்கைக்கு, அரசால், வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி 2022-23ம் கல்வியாண்டிற்கு, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையற்ற அனைத்து தனியார் சுயநிதிப் பள்ளிகளில், நுழைவு வகுப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு, ஆன்லைனில் வருகிற மே மாதம், 18-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மாணவர் சேர்க்கைக்கு, rte.tnschools.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். மாணவரின் புகைப்படம், பிறப்புச்சான்று, பெற்றோரின் ஆதார் அட்டை நகல், இருப்பிடச்சான்று, ஜாதிச்சான்று ஏதேனும் இருப்பின் அதனை பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்கு, அரசு இ-சேவை மையங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 

நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டால், மே மாதம் 23-ந் தேதி, அந்தந்த பள்ளிகளில் குலுக்கல் முறை செயல்படுத்தப்படும். தகுதி வாய்ந்தவர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Tags:    

Similar News