உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் அன்னதான உண்டியலில் ரூ.50 ஆயிரம் வசூல்

Published On 2022-04-23 12:54 IST   |   Update On 2022-04-23 12:54:00 IST
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் அன்னதான உண்டியலில் ரூ.50 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது.
கன்னியாகுமரி:

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து வழிபட்டு செல்கிறார்கள். 

அவ்வாறு வருகின்ற பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதான உண்டியல் ஒன்றை கோவிலில் வைத்துள்ளனர். இந்த உண்டியல் மாதந்தோறும் திறந்து  எண்ணப் படுவது வழக்கம்.

அதுபோல் நேற்று கண் காணிப்பாளர் சிவக்குமார், மேலாளர் ஆறுமுகதரன், ஆய்வாளர் ராமலட்சுமி, கணக்கர் கண்ணன் மற்றும் கோவில் பணியாளர்கள் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில் ரூ.50 ஆயிரத்து 538 வசூலாகி இருந்தது.

Similar News