உள்ளூர் செய்திகள்
தக்கலை அருகே பெண்ணிடம் 4 பவுன் செயின் பறிப்பு
தக்கலை அருகே பெண்ணிடம் 4 பவுன் செயின் பறிப்பு - செடி வாங்குவது போல் சென்று மர்ம நபர்கள் கைவரிசை
கன்னியாகுமரி:
திருவிதாங்கோடு கோட்டவிளை வட்டவிளையை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி சாந்தாபாய். இவர் புலியூர்குறிச்சியில் உள்ள தனியார் நர்சரி கார்டனில் வேலை செய்து வருகிறார்.
நேற்று இரவு இவர் வேலை செய்து கொண்டிருக்கும் போது உள்ளே வந்த நபர் ஒருவர் செடி வாங்குவதுபோல், பாவனை செய்து சாந்தா பாயின் கழுத்தில் கிடந்த 4 பவுன் செயினை பறித்தார். பின்னர் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து சாந்தாபாய் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். சம்பவ இடத்திற்கு சென்று சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.