உள்ளூர் செய்திகள்
பூதப்பாண்டி அருகே அம்மன் கழுத்தில் கிடந்த 6 கிராம் நகை திருட்டு
பூதப்பாண்டி அருகே அம்மன் கழுத்தில் கிடந்த 6 கிராம் நகை திருடப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
பூதப்பாண்டி அருகே எட்டாமடை பகுதியில் முத்தாரம்மன் சிவ சுடலைமாடசாமி கோவில் உள்ளது.
இந்த கோவிலில் உள்ள துர்க்கை அம்மன், மாரி அம்மன் கழுத்தில் கிடந்த 6 கிராம் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இதுகுறித்து கோவிந்தன் பூதப்பாண்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.