உள்ளூர் செய்திகள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக மாற்றப்பட்டனர்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, தேனி, ராமநாதபுரம், கரூர், திருச்சி மாவட்டங்களில் பணிபுரிந்த 23 இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.
நாகர்கோவில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜென்சி நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். தக்கலை இன்ஸ்பெக்டர் சுதேசன் தூத்துக்குடி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
மார்த்தாண்டம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டராக சாந்தி நியமிக்கப்பட்டுள்ளார். தக்கலை இன்ஸ்பெக்டராக நெப்போலியன், குளச்சல் அனைத்து மகளிர் இன்ஸ் பெக்டராக சங்கீதா அன்பு ஜூலியட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நாகர்கோவில் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டராக மதனகலா, நாகர்கோவில் மதுவிலக்கு இன்ஸ்பெக்டராக முத்துமணி, அருமனை இன்ஸ்பெக்டராக முருகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை நெல்லை சரக ஐ.ஜி. பிறப்பித்துள்ளார்.