உள்ளூர் செய்திகள்
அபராதம்

நாகர்கோவிலில் போக்குவரத்து விதிகளை மீறிய 310 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம்

Published On 2022-04-23 08:36 IST   |   Update On 2022-04-23 08:36:00 IST
நாகர்காவிலில் போக்குவரத்து விதிகளை மீறிய 310 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:

நாகர்கோவிலில் கோட்டார், கிறிஸ்தவ பெண்கள் கல்லூரி சந்திப்பு, கலெக்டர் அலுவலக சந்திப்பு, பால்பண்ணை, மணிமேடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோட்டார் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, ஒரு வாலிபர் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்தார். போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளுடன் தப்பி செல்ல முயன்றார்.

இருப்பினும் அந்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து ரூ.700 அபராதம் விதித்தனர். இதேபோல் போலீசாரின் வாகன சோதனையில் சிலர் தப்பி சென்றதையும் காண முடிந்தது. அதன்படி நாகர்கோவில் முழுவதும் நேற்று காலை முதல் மாலை வரை நடத்திய வாகன சோதனையில், ஹெல்மெட் அணியாமலும், உரிய ஆவணங்கள் இல்லாமலும் என மொத்தம் 310 இருசக்கர வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டன. இதில் சில வாகனங்கள் பறிமுதலும் செய்யப்பட்டது.


Similar News