உள்ளூர் செய்திகள்
மனு அளிக்க வந்த வியாபாரிகள்.

திரு.வி.க. மார்க்கெட்டை இடித்தால் 250 வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்

Published On 2022-04-22 16:59 IST   |   Update On 2022-04-22 16:59:00 IST
வியாபாரிகள் பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவிடம் நேற்று மனு கொடுத்தனர்.
பொள்ளாச்சி: 

பொள்ளாச்சி திரு.வி.க மார்க்கெட்டில் ரூ.3 கோடியே 20 லட்சம் செலவில் புதிதாக வணிக அங்காடி அமைக்க சட்டசபை மானியக் கோரிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

இந்த நிலையில் மார்க்கெட்டில் கடைகள் வைத்து இருக்கும் வியாபாரிகள் பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவிடம் நேற்று மனு கொடுத்தனர்.அந்த மனுவில், பொள்ளாச்சி திரு.வி.க மார்க்கெட்டில் கடந்த 1986&ம் ஆண்டில் இருந்து காய்கறி மற்றும் பலசரக்கு வியாபாரம் செய்து வாழ்க்கை நடத்தி வருகிறோம். 

மார்க்கெட்டில் கடந்த 2014&-15 ஆம் நிதியாண்டில் சுமார் ஒரு கோடியே 25 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டது. நகராட்சி நிர்வாகம் விதிக்கும் புதிய ஆணைக்கு உட்பட்டு சுகாதாரத்திற்கு எந்தவித இடையூறும் இல்லாமல் வியாபாரம் செய்து வருகிறோம். 

அந்த இடத்தில் நகராட்சி நிர்வாகம் வணிக அங்காடி கட்டி வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்த உள்ளதாக தெரிகிறது. மார்க்கெட்டில் உள்ள கடைகளை இடித்தால் சுமார் 250 க்கும் அதிகமான குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள். எனவே இடிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News