உள்ளூர் செய்திகள்
பொள்ளாச்சி அம்பராம்பாளையம் ஆற்றில் நகராட்சி தலைவர் திடீர் ஆய்வு
தண்ணீரில் உப்பு தண்ணீர் கலந்து வருவதாக நகராட்சிக்கு புகார் சென்றது.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி நகராட்சியில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஆழியாறு தண்ணீர் அம்பராம்பாளையம் பகுதியில் இருந்து எடுக்கப்பட்டு சுத்திகரிப்பு செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக தண்ணீரில் உப்பு தண்ணீர் கலந்து வருவதாக நகராட்சிக்கு புகார் சென்றது.
இதையடுத்து நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், ஆணையாளர் தானு மூர்த்தி ஆகியோர் நேற்று மாலை அம்பராம்பாளையம் ஆற்றுப் பகுதி மற்றும் சுத்திகரிப்பு செய்யும் இடங்களில் ஆய்வு செய்தனர்.
இது குறித்து நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் கூறுகையில்,
நகராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீரில் உப்பு தண்ணீர் இருப்பதாக புகார் வந்ததின் பேரில் இங்கு ஆய்வு செய்யப்பட்டது. தற்போது ஆழியாறு தண்ணீர் குறைவாக வருகிறது இதற்கிடையில் அம்பராம்பாளையம் பகுதியில் பாலாற்று தண்ணீரை கலக்கும் இடத்தில் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது
இரண்டு நீரும் கலப்பது தண்ணீரின் சுவை மாறும் வாய்ப்பு உள்ளது ஆகவே பாலாற்றில் தண்ணீர் கலக்கும் இடத்திற்கு முன்பு ஆற்று தண்ணீரை மட்டும் எடுக்க திட்டமிட்டுள்ளது இது தொடர்பாக அரசுக்கு கருத்துரு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.