உள்ளூர் செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட வாகனம்

குலசேகரம் அருகே அதிக லோடு ஏற்றி வந்த கனரக வாகனங்களுக்கு அபராதம்

Published On 2022-04-22 16:05 IST   |   Update On 2022-04-22 16:05:00 IST
குலசேகரம் அருகே அதிக லோடு ஏற்றி வந்த கனரக வாகனங்களுக்கு அபராதம்
நாகர்கோவில், ஏப்.22-

குமரி மாவட்டத்தில் இருந்து தினமும் கேரளாவுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில் எம் சாண்ட், சல்லி, கல் போன்றவை இரவு நேரங்களில் கடத்தப் பட்டு வருகிறது.  இதை தடுப்பதற்கு களியாக்காவிளை சோதனை சாவடியில் கண்காணித்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. 

இதனால் தற்போது அனைத்து வாகனங்களும் பொன்மனை, குலசேகரம்,  நெட்டா வழியாக மாற்று பாதையில் கொண்டு செல்கிறார்கள் இதை தடுப்பதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் உத்தரவுபடி தனி பிரிவு போலீசார் அளவுக்கு அதிகமாக லோடு ஏற்றி செல்லும் வாகனங்களை கண்காணித்து பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகிறார்கள் நேற்று இரவு குலசேகரம் பகுதியில் சென்ற 5 வாகனங்களை பறிமுதல் செய்து ரூ.45 ஆயிரம் அபராதம் விதித்தனர். 

குலசேகரம் போலீஸ் நிலையத்தில் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Similar News